செம்மண் வழக்கில் பொன்முடி மகன் ஆஜர் 90 பக்க குற்றப்பத்திரிகை ஒப்படைப்பு..!

2 Min Read
பொன்முடி - கௌதம சிகாமணி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 2006 – 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கனிம வளங்கள் மற்றும் சுரங்க துறை அமைச்சராக இருந்தார்.அப்போது அவரது மகன் கௌதம சிகாமணிக்கு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துரை கிராமத்தில் செம்மண் எடுக்க 2007-ல் அரசு அனுமதி அளித்தது.

- Advertisement -
Ad imageAd image

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதிக அளவில் செம்மண் எடுத்ததாக பொன்முடி, கௌதம சிகாமணி உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்ட எட்டு பேர் மீது 2012-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும் கௌதம சிகாமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செம்ம அல்லியதால் அரசுக்கு 28 கோடி 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனக்கூறி ஜூன் 19 தள்ளுபடி செய்தது.

கௌதம சிகாமணி

இந்த வழக்கு அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஜூலை 17, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.பின்னர் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பொன்முடியும் அவரது மகனும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.சோதனைக்கு பின்னர் கணக்கில் வராத 81.7 லட்சம் ரூபாய் பணம், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பணம், ஆகியவற்றை பறிமுதல் செய்து அமலாக்கத் துறை 41.9 கோடி ரூபாய் அளவுக்கான நிரந்தர வைப்பு தொகையை முடக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கௌதம சிகாமணி, ராஜமகேந்திரன், பி.ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோருக்கு எதிராக 90 பக்க குற்ற பத்திரிக்கையை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகஸ்ட் 21-ல் தாக்கல் செய்தார்.

பொன்முடி

பின்னர் குற்றப்பத்திரிகைக்கு எண்ணிட்டு கோப்புக்கு எடுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.மலர் வாலன் டினா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கௌதம சிகாமணி. ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்ற பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. இதை அடுத்து குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கு விசாரணையை டிசம்பர் 22-க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share This Article
Leave a review