கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியல் – தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்..!

2 Min Read
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

கோவை மாவட்டத்தில் கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியல் என்ற சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது – தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கல்லூரி மாணவர்களிடையே அரை மணி நேரம் அரசியலைப் பற்றி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடுமையான பணி சூழ்நிலையிலும் ஏன் இங்கு வந்தேன் என்றால் பாலிடிக்ஸ் என்பது எனக்கு பிடிக்கும், இந்த இடத்தில் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதை யாராலும் சொல்ல முடியாது.ஏனென்றால் தலைப்பே அரசியலை பற்றிதான்.பொலிடிக்கல் அறிவியல் என்பது நாட்டிற்கு உபயோகமான ஒரு சப்ஜெக்ட்.அரசியல் இல்லாத இடமே கிடையாது.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

இளைஞர்களுக்கு படிக்கும் போது அரசியல் தேவை என்பது தான், எனது அழுத்தமான கருத்து.இது யாரு என்ன சொன்னாலும் மறுக்க முடியாது நேர்மறையான அரசியல் தேவை.தற்போது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.எதிர்மறையான கருத்துக்களை சொல்ல வேண்டியதென்றால் மாணவர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் போராட்டம் நடத்தி மாணவர்களை பகடுக்காயாக பயன்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்.ஆனால் அவர்கள் தலைவராக வருவதை நான் வரவேற்கிறேன்.

பிரதமர் உலகத்தில் எங்கே போனாலும் தமிழ் மொழியை சொல்லிவிட்டு தான் அவர் பெருமையை பேசுகிறார். அவர் தமிழுக்கு பங்கம் விளைப்பாரா?இந்தியாவில் திருக்குறளை பிரதமர் மேற்கோள் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மொழியை அவர் கையாண்டதற்கு நாம் யாரும் அவரை பாராட்டவில்லை.பெரும் புள்ளிகளாக மாணவர்களும் வரவேண்டும்.கட்டு கட்டாக பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் அரசியல் என்பதும், மற்றவர்களுக்கு அரசியல் இல்லை என்ற ஒரு எண்ணம் வந்து கொண்டிருக்கிறது.

அதே போல கத்தி கத்தி பேசுபவர்களுக்கு அரசியல் இல்லை, கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியல் என்ற சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாமல் சிறப்பான ஒரு சூழ்நிலையை மேற்கொள்ள வேண்டும்.மாணவர்கள் நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும் என்பது அல்ல, அரசியல் சார்ந்த கருத்துக்களை எழுதலாம், தூய்மையான அரசியல்வாதிகளுக்கு உதவலாம்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

பெண்களுக்கு 33 சதவீதம் ,சட்டமன்றத்தையும், பாராளுமன்றத்தையும் அலங்கரிப்பவர்கள் இவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் அதனால் தான் பெண்களுக்கு அரசியல் வேண்டும்.ஆண்களை விட அதிகமாக அரசியல் செய்ததால் ஆளுநராக நிற்கிறேன்.

அரசியல் வாரிசாக இருந்தால் உங்களை காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும், நீங்களே நேரடியாக கட்சி அல்லது ஒரு சமுதாய அமைப்புக்கு வந்தால் பல சவால்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த துணிச்சலையை மட்டும் விட்டு விடக்கூடாது என தெரிவித்தார்.

Share This Article
Leave a review