தர்மபுரி மாவட்டம், போலீஸ் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தொந்தரவு கொடுத்த, சப் – இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் விசாராணையில் கூறப்பட்டதாவது;
தர்மபுரி மாவட்டம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள ஒரு கிராம பகுதியைச் சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், ஓசூர் பேடர அள்ளி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு குழந்தை திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டில் அந்த சிறுமிக்கும், மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து, தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக அந்த சிறுமி தர்மபுரி மாவட்ட ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக அந்த புகாரின் பேரில், தர்மபுரி மாவட்ட காவல் நிலைய போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் சகாதேவன் வயது 55. இது தொடர்பான விசாரணை நடத்தினார். அப்போது சிறுமியின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் முதலில் அந்த சிறுமியை மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டி தொல்லை கொடுத்து வந்தார். பின்னர் விசாரணைக்கு வந்த இடத்தில் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக ஹெல்ப்லைனுக்கு சிறுமி புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து சிறுமியை மீட்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். சிறுமியை குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக அவரது கணவர் குடும்பத்தினர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். காப்பகத்தில் இருந்த போது குழந்தைகள் நல உறுப்பினரிடம் ஏரியூர் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சகாதேவன், தன்னை மிரட்டி வந்ததாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சிறுமி புகார் தெரிவித்தார்.

அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் சகாதேவனை நேற்று போலீசார் கைது செய்தனர். புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.