திண்டிவனத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வழிப்பறி சம்பவத்தால் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழப்பு. உடன் வந்த காதலனிடம் போலீசார் விசாரணை. விசாரணையின் முடிவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இருவரிடம் இருந்து தப்பித்து ஓடி பெண் காரில் மோதி உயிரிழந்ததாக தகவல். பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்ட திருநெல்வேலி சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியது போலீஸ் அப்போது உதய பிரகாஷ் என்கிற மற்றொரு நபரை பற்றிய தகவல் வெளிவந்ததை தொடர்ந்து அவனை தேடி போலீசார் சென்றபோது போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முற்பட்ட வரை போலீசார் சுட்டதில் வலது காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் உதய பிரகாஷ்.

திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்னை, கொளத்தூரை சேர்ந்த 3ம் ஆண்டு பி.காம்., படித்து வரும் மாணவர் ரமேஷ் (21) தனது காதலி சென்னை, சரவணா ஸ்டோரில் வேலை செய்து வந்த பவித்ராஸ்ரீ (20) யுடன் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்ல பைக்கில் வந்து கொண்டிருந்தபோது விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே அவர்களது பைக்கை இருவர் வழிமறித்து மொபைல் போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பவித்ராஸ்ரீ கடத்திச் சென்றுள்ளனர் அவர்களை தேடி மாணவர் ரமேஷ் சென்றுள்ளார். அப்போது அவருடன் வந்த பவித்ராஸ்ரீ யிடம் வழிப்பறி ஆசாமிகள் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதால் அவர்களிடம் இருந்து தப்பிக்க பவித்ராஶ்ரீ ஓடியதால் சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பவித்ராஸ்ரீ தலை நசுங்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த ஒலக்கூர் போலீசார் கல்லூரி மாணவரை காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசார் அப்பெண்ணை வழிப்பறி ஆசாமிகள் தவறாக நடக்க முயன்றபோது வாகனத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது மாணவருக்கும், அவரது காதலிக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதில் வாகனத்தின் முன்பு ஓடிச் சென்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாணவர் ஆத்திரத்தில் வாகனத்தின் முன்பு தள்ளி விட்டு கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த இந்த விசாரணையில் வேறு இரு இளைஞர்கள் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட போது அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய பெண் விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஒரு இளைஞனை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவரிடம் இருந்து வந்த தகவலை எடுத்து தலை மறைவாக இருந்த உதய பிரகாஷ் என்கிற இளைஞரை போலீசார் தேடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் ஏரிக்கரை அருகே ஒரு இளைஞன் மறைந்து இருப்பதை கண்டு போலீசார் எச்சரிக்கை தப்பிக்க முயன்றுள்ளார். அவரை போலீசார் துரத்தி செல்லும் பொழுது போலீசார் இருவரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற அந்த இளைஞன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் காவலர் தீபன் ஆகியோரை கத்தியால் வெட்டி தப்பி ஓட முயன்று உள்ளார் இரு காவலர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் குற்றவாளியை சுட்டுப் பிடித்தார் .இரு போலீசாரும் முண்டியபாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த போலீசாரை மருத்துவமனையில் பார்த்து ஆறுதல் சொல்ல வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஏற்கனவே 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் அவன் கொடுத்த தகவலை அடிப்படையில் மேலும் ஒருவரை தேடி வந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது இது பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.