அசாமை தொடர்ந்து இனி ஹரியாணாவிலும் உடல்பருமனான காவலர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க முடிவு .
ஹரியானா மாநிலத்தில் உடல் பருமனான போலீசாருக்கு காவல்துறையில் வேறு பணி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. உடல்பருமன் காவலர்கள் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்தால் மீண்டும் பழைய பணி வழங்கப்படும் என்று அமைச்சர் அனில்விஜ் கூறியுள்ளார்.
ஹரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் வெள்ளிக்கிழமை ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார் அதில் அவர் அதிக எடை கொண்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு காவல்துறையில் வேறு பணிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் . உடல் எடை அதிகமுள்ள காவலர்கள் உடற்பயிற்சி செய்து எடையை குறைப்பார்களே ஆனால் அவர்களை மீண்டும் பழைய பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார் .
Keeping in mind the fitness of Police officers and personnel, Haryana Health Minister Anil Vij issues an order – overweight Police personnel be transferred to Police lines. They can join back the duty once again after they gain fitness through exercise.
(File photo) pic.twitter.com/j0tV5PULIB— ANI (@ANI) May 19, 2023
இந்து புதிய உத்தரவு காவல்துறை அதிகாரிகளின் உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர் .
இந்த அறிவிப்பு அசாம் மாநிலத்தை பின்பற்றி தற்போது ஹரியானா செயல்படுத்த திட்டமிட்டுள்ளது . இதன்படி அசாம் மாநிலத்தில் காவலர்களுக்கு பாடி மாஸ் இண்டெக்ஸ் என்று அழைக்கப்படும் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) பதிவு செய்யப்பட்டு , அவர்களுக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கி உடற்பயிற்சியின் மூலம் உடல் பருமனை குறைக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது .

இதன் மூலம் அசாம் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) மற்றும் அசாம் காவல் சேவை (ஏபிஎஸ்) அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்களுக்கான உடற்தகுதி கணக்கெடுப்பை முன்னதாக அம்மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) ஞானேந்திர பிரதாப் சிங் , “தகுதியற்றவர்கள்” என்று கண்டறியப்பட்டவர்களுக்கு சேவையிலிருந்து விருப்ப ஓய்வு (VRS) வழங்கப்படும் என்றும் மேலும் உடல்பருமனான காவலர்கள் தங்கள் உடற்தகுதிக்கு மூன்று மாதங்கள் வேலை செய்ய வேண்டும், அதைத் தொடர்ந்து அவர்களின் பிஎம்ஐ பதிவு செய்யப்படும்.
“ஐபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து அசாம் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆகஸ்ட் 15 வரை மூன்று மாதங்கள் அவகாசம் வழங்க திட்டமிட்டுள்ளோம், பின்னர் அடுத்த பதினைந்து நாட்களில் பிஎம்ஐ மதிப்பீட்டைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். உடல் பருமனாக உள்ள அனைவருக்கும் (பிஎம்ஐ 30+ ) வகை உடல் எடையைக் குறைக்க (நவம்பர் இறுதி வரை) , மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும், அதன் பிறகு, ஹைப்போ தைராய்டிசம் போன்ற உண்மையான மருத்துவக் காரணங்களைக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கபடும் என்று தெரிவித்தார் .
மேலும் காவலர்களை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுமார் 300 காவலருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படும் என்று அறிவித்தார் .
இதனை பின்தொடர்ந்து , ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உடற்தகுதியை மனதில் கொண்டுஅதிக எடை கொண்ட காவலர்களை காவல் துறையில் வேறு பணிகளுக்கு மாற்ற வேண்டும். அவர்கள் உடற்பயிற்சி மூலம் உடற்தகுதி பெற்ற பிறகு மீண்டும் பணியில் சேரலாம் என்று பதிவு செய்துள்ளார் .