விருதுநகரில் பாஜக கொடி நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையினர், பாஜகவினருக்கம் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு.அப்பகுதி பெரும் பரப்பரப்பு.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூர் பகுதியில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு பாஜக கொடி கம்பம் நட்டதை போலீசார் பிடுங்கியதால் அப்போது பாஜகவினருக்கும் போலீசாருக்கும் மோதலாக மாறியது. இதனையடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை நவம்பர் 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பாஜக கொடிக் கம்பங்கள் நடப்படும் என அதிரடியாக அறிவித்திருந்தார்.

பாஜக கொடி கம்பம் நடுவதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு நிர்வாகிகள் மனு அளித்தனர். ஆனால் காவல்துறை தரப்பில் இதற்கு காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. பாஜக கொடி கம்பம் நடுவதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் கொடிக் கம்பத்தை அகற்றினர். இதனால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் போலிசார் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க பத்தாயிரம் கொடிக்கம்பங்கள் ஊன்றுவது என முடிவு செய்யப்பட்டது.
அதனை முன்னிட்டு விருதுநகர் முத்தால் நகரில் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மாநில இணைபொருளாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொடிக்கம்பங்களை ஊன்ற ஆரம்பித்தனர். பாஜக கொடி கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த அடக்கு முறையை கையாளும் தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கடும் கண்டனம் தெறிவித்தனர். அப்பொழுது காவல்துறையினர் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பத்தை ஊன்ற கூடாது என கூறினர்.

அதையும் மீறி பாஜகவினர் கொடிக்கம்பத்தை ஊன்ற முயற்சிக்கும் பொழுது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பகுதி பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் காவல்துறையினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.