வலங்கைமான் வெடிக்கடைகளில் காவல்துறையினர் ஆய்வு, அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல்..!

2 Min Read
வெடி குடோன்களில் காவல்துறையினர் நேரில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற பகுதியில் வெடி குடோன்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகளவிலான வெடி மற்றும் வெடி மருந்துகளை பதுக்கி உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

- Advertisement -
Ad imageAd image

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற பகுதி சின்ன சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், நகர பகுதியில் சுமார் 44 வெடி கடைகள் மற்றும் 14 வெடி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. வருடம் முழுவதும் இங்கு வெடி விற்பனையாகி வரும் நிலையில், டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வெடி வாங்குவதற்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

வெடிமருந்து வைக்கும் குடோன்

ஆனால் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமாக வெடி மற்றும் வெடி மருந்தின் மூலப் பொருட்களை உற்பத்தியளர்கள் அங்கு விற்பனை செய்யும், வெடி உற்பத்தி நிறுவனங்கள் ஸ்டாக் குடோனில் எடுத்து வைப்பதாக,திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில். காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வெடி மற்றும் வெடி மருந்து தயாரிக்கும் மூலக்கூறுகள்

அப்போது, அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக வெடி மற்றும் வெடி மருந்து தயாரிக்கும் மூலக்கூறுகள் இருப்பதை காவல் துறையினர் கண்டு பிடித்தனர். காவல் துறையின் நடவடிக்கை முன்கூட்டியே அறிந்த தகவலின் அடிப்படையில் வெடி  வியாபாரிகள் கடையை பூட்டி விட்டு தலைமறைவாக சென்று விட்டனர். ஆனாலும் காவல் துறையினர் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, வெடி மற்றும் வெடி மருந்து தயாரிக்கும் மூலக்கூறுகள் இருப்பதை கண்டு பிடித்து, காவல் துறையின் வசம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

வெடிக்கடைகளில் காவல்துறையினர் ஆய்வு

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் வெடி வியாபாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி திருநாளுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் வெடி மருந்து விற்கும் வியாபாரிகள் மத்தியில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review