கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை வனப் பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடிகளான அருண் மற்றும் அன்பரசன் ஆகியோர் புதுச்சேரியில் இருந்து மயிலம் காவல் நிலையத்திற்கு நிபந்தனை ஜாமீனில் கையொப்பமிட இருசக்கர வாகனத்தில் இன்று சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது கோர்காடு அருகே திடீரென வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று ஆயுத்தங்களால் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து அருண் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரும் அப்பகுதியிலிருந்து தப்பித்த்து ஒரு கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு ஓடியபோது விடாது துரத்தி சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்ததனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து வானூர் போலீசார் குற்றவாளிகளை பல இடங்களில் தேடி வந்திருந்தனர். இறுதியில் ஸ்ரீகாந்த் ,ஜெகன், செழியன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கான காரணம் பற்றி தெரிந்து கொண்ட போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.