நாகை மாவட்டம் திருக்குவளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கொத்தனராக வேலை பார்த்து வருகிறார், கடந்த நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்த ஒரு பெண்னுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ராஜாவுடன் வாழ்ந்து வரும் பெண்ணிற்க்கு, 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலம் சோர்ந்து காணப்படவே அவரை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார் அந்த பெண். அங்கு தான் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்ததில், கர்ப்பத்திற்கு தாயுடன் வசித்து வந்த கொத்தனார் ராஜா தான் காரணம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜா போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி மணிவண்ணன் உத்தரவிட்டார்.