வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான ஆணையத்தின் காலக்கெடு 6 மாதம் நீடிக்கப்பட்டுள்ளநிலையில் இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக சட்டசபையில் திமுக , அதிமுக , பாமக , தவாக உள்ளிட்ட காட்சிகள் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பது தொடர்பாக பாமக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
வன்னியர்கள் இடஒதிக்கீடு குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசியபோது ” சமுதாயத்துக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவித்துள்ள ஆணையத்தின் பதவி காலத்தை 6 மாதம் நீட்டிக்க தேவையில்லை. ஒரு மாதம் நீட்டித்தாலே போதும். இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வரும் கல்வியாண்டில் இட ஒதுக்கீடு அமல்படுத்தவி்ல்லை என்றால் மருத்துவ படிப்பு மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் இட ஒதுக்கீடு பெறமுடியாமல் போய்விடும். எனவே ஆணையத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்திருப்பதை ஏற்க முடியாது ” என்று அவர் தெரிவித்தார் .

மேலும் அவர் பேசுகையில் அண்மையில் நடந்த அரசு தேர்வுகளில் ஒரு வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் கூட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆட்சியர் பதவிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றும் , முதல்-அமைச்சர் 10.5 சதவீத இடஓதுக்கீட்டை செயல்படுத்துவார் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார் .
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தி.மு.க. ஆட்சியில் எப்படி 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோமோ, அதேபோல இதையும் கொண்டுவர முயற்சி செய்வோம்.
10.5 சதவீதம் எந்த நிலையில் கொண்டுவரப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவசர அவசரமாக 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தி.மு.க. ஆட்சியில் எப்படி 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோமோ, அதேபோல இதையும் கொண்டுவர முயற்சி செய்வோம். 10.5 சதவீதம் எந்த நிலையில் கொண்டுவரப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவசர அவசரமாக 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களை பொறுத்தவரை யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று பார்க்கவில்லை. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த உடனே 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியே, உடனே அமல்படுத்தும் முயற்சியில், ஈடுபட்டு வருகிறோம்.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியில் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மூன்று மாத காலத்திற்குள் பணியை நிறைவேற்றவில்லை என்பதால்தான், காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது’ என விளக்கம் கொடுத்தார்.