பாமக என்எல்சி போராட்டம் அன்புமணி கைது போலீஸ் துப்பாக்கிச் சூடு

0
48
அன்புமணி கைது

விவசாயிகளின் விளைநிலங்களை அத்துமீறி கையகப்படுத்தும் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் கலந்து கொண்டனர். என்எல்சிக்கு எதிராக பலரும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக சுமார் 12,000 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் உரிய நிவாரணம் வழங்காமல், உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பு என்பதை நிறைவேற்றாமல் என்.எல்.சி. நிர்வாகம், அத்துமீறி விளைநிலங்களை கையகப்படுத்துகிறது என்பது குற்றச்சாட்டு.

நெய்வேலி சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை கிராமங்களிலும் பொதுமக்கள், நிலம் கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் மேல்வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தியத்ற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்தப் போக்கை கண்டித்து பாமக போராட்டம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்களோடு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திடீரென அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்படுவதாக போலீசார் அறிவித்து அவரை கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டவுடன் பாமக தொண்டர்கள் கொந்தளித்து போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். பின்னர் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கொடி கம்பங்களை கொண்டு போலீசாரை தாக்கினர். போலீசார் உடனடியாக தடியடி நடத்தி தொண்டர்களை கலைத்தனர். அதையும் மீறி தொண்டர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் தண்ணீரை பீச்சி அடித்து வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

இந்த இருதரப்பு மோதலில் ஏராளமான போலீசார் காயம் அடைந்துள்ளனர். பாமக தொண்டர்களும் காயம் அடைந்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் ஏற்றப்பட்ட வாகனத்தை அங்கிருந்து செல்ல விடாமல் பாமக தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதால் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here