பிரதமர் மோடி சென்னை வருகை , பாதுகாப்பு தீவிரம் .

4 Min Read
பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணத்தின் போது பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் . 2024 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகின்றது .

பல்வேறுநலத்திட்ட பணிகளை தொடங்கிவைக்க தமிழ்நாடு , கர்நாடாக மாநிலத்திற்கு 2 நாட்கள் பயணமாக வருகை புரியும் பிரதமர் நரேந்திர மோடி , இன்று முதற்கட்டமாக சென்னை வந்தடைகிறார் .

- Advertisement -
Ad imageAd image

பிரதமர்நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்துஇந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணியளவில் வந்தடைகிறார் .

அவரைதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்உள்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள். நாட்டுக்கு அர்ப்பணிப்பு இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமானநிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

விழாமுடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.30 மணியளவில் புறப்பட்டு நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிபேட்தளத்துக்கு மதியம் 3.50 மணியளவில் வந்தடைகிறார். அங்கிருந்து மதியம் 3.55 மணியளவில் கார் மூலம் சென்னைசென்டிரல் ரெயில் நிலையத்துக்கு புறப்படுகிறார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களது வரவேற்பை ஏற்றபடி மாலை 4 மணியளவில் சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தை வந்தடைகிறார் .

அங்குநடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை-கோவை ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த விழா 20 நிமிடங்கள்நடக்கிறது.

இதைத்தொடர்ந்து பிரதமர் மாலை 4.25 மணியளவில் கார் மூலம் புறப்பட்டுமெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு மாலை 4.40 மணியளவில் வருகை தருகிறார். அங்கு நடைபெறும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில்பங்கேற்கிறார்.

முதலில்இந்த நிகழ்ச்சி மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திலேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில்இருந்து நீக்கியதை கண்டித்து தமிழக காங்கிரசார் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி மெரினாவிவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்தநிகழ்ச்சி மாலை 4.45 மணி முதல் 5.45 மணிவரை ஒரு மணி நேரம்நடக்கிறது. அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி கார் மூலம்புறப்பட்டு அடையார் ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு மாலை 5.55 மணியளவில் வருகிறார். அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேருகிறார்.

பின்னர்பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து கார்மூலம் புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட்மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். இதில், தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரெயில் சேவை, நாகை மாவட்டத்தின் உப்புஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகலரெயில்பாதை திட்டம், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்குஅமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலைதிட்டம் ஆகியவற்றை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச்சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான4 வழிச்சாலை திட்டத்துக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். ரூ.2 ஆயிரத்து 400 கோடிமதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழககவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிர்தியா சிந்தியா, எல்.முருகன், தமிழகஅமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விழா மாலை 6.30 மணிமுதல் இரவு 7.30 மணி வரை ஒருமணி நேரம் நடக்கிறது.

அதன்பிறகுசென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.40 மணியளவில் கர்நாடக மாநிலம் மைசூரு சென்றடைகிறார். இரவு அங்கு தங்கும் அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு நீலகிரி தெப்பக்காடு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு காலை 9.35 மணியளவில் வருகை தந்து சுற்றி பார்க்கிறார். பின்னர் அவர் காலை 9.45 மணியளவில் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு காலை 10.20 மணியளவில் புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர்நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டிபோலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனையின் பேரில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்ற உளவுப்பிரிவு போலீசார்எச்சரிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றிரவு நகரில் வாகன சோதனை தீவிரமாகஇருந்தது. மேலும் லாட்ஜூகள், தனியார் தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பாதுகாப்புஅணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்நடக்கும் இடங்களில் இந்த ஒத்திகை நடந்தது. சென்னை போலீசாருடன் இணைந்து டெல்லியில் இருந்து வந்திருந்த பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

Share This Article
Leave a review