கோடை விடுமுறை முடிந்து, வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், இந்த வார இறுதி நாட்களில் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.