பூங்கதவே தாழ் விறவாய்.
தமிழ் திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். “பூங்கதவே தாழ் விறவாய்..” உள்ளிட்ட ஏராளமான சிறந்த பாடல்களை பாடியவர் உமா ரமணன். பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்..’ ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ்திறவாய்’ பாடல்கள் மூலம் தமிழ் திரை இசை ரசிகர்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்தவர் உமா ரமணன். ‘ஆகாய வெண்ணிலாவே..’, ‘நீ பாதி நான் பாதி..’, ‘பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்..’ உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இளையராஜா இசையில் பாடியுள்ளார் உமா ரமணன்.
கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு
எம்.எஸ்.விச்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களின் பாடல்களை பாடியுள்ளார் உமா ரமணன். விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில், “கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு..” பாடலை பாடியிருந்தார் உமா ரமணன். அதன் பிறகு பாடல் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காவிட்டாலும் மேடைக் கச்சேரிகளில் கணவர் ரமணன் உடன் இணைந்து பாடி வந்தார் உமா ரமணன். உமா ரமணனின் கணவர் ரமணனும் பிண்ணனி பாடகர் தான். ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ள ரமணன், சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘சப்த ஸ்வரங்கள்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர் ரமணன். சென்னை அடையாறில் வசித்து வந்தார் உமா ரமணன். கடந்த சில மாதங்களாக உடல் நிலை குன்றி இருந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார் உமா ரமணன். அவருக்கு வயது 69. உமா ரமணனின் மறைவால், இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உமா ரமணைன் இறுதிச் சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் நாளை மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை மேடைக் கலைஞர்கள்
திரைபடபாடகி உமா ரமணன் உடலுக்கு ஏராளமான திரை துறையினர் அஞ்சலி செலுத்தி வருகிறனர்உமா படித்துக் கொண்டிருந்தபோதே, பழனி விஜயலட்சுமியிடம் பாரம்பரிய இசையைக் கற்றார். உமா பல கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்றதுடன் பல வெகுமதிகளையும் பாராட்டுகளையும் வென்றார். பின்னர் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மேடைப் பாடகருமான ஏ. வி. இரமணனைச் சந்தித்தார். அப்போது இரமணன் தனது மேடைக் கச்சேரிகளுக்காக புதிய குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போதிருந்து, உமாவும் இரமணனும் இரட்டை மேடைக் கலைஞர்களாக மாறினர். இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அவரும் ஒரு இசைக்கலைஞராவார்.