- பெட்ரோல் இலவசம், பெட்ரோல் போட வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி.
தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிய வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமும் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு நூதன விழிப்புணர் நிகழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் “BUN ன்னா க்ரீம் இருக்க வேண்டும், Bikeன்னா ஹெல்மெட் இருக்கனும்” என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் தலைகவசத்துடன் பெட்ரோல் போட வந்த 50 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு க்ரீம் பன்னுடன் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் பெட்ரோல் போட வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சையில் ருசிகரம்Bunன்னா Cream இருக்கனும் , Bikeன்னா Helmet இருக்கனும்.ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இரு சக்கர வாகனத்தில் வரும் பலர் தலைக்கவசம் (Helmet) அணியாமல் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் செல்கின்றனர். இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுகிறது . விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மட்டுமல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது . புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் , அவ்வாறு செல்லாவிட்டால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படுகிறது . இந்நிலையில் இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் தொடர்ந்து பல்வேறு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன .அதன் ஒரு பகுதியாக Bunன்னா Cream இருக்கனும் , Bikeன்னா Helmet இருக்கனும் என்ற தலைப்பில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை அருகே நடைபெற்றது . இதில் அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 50 வாகன ஓட்டிகளுக்கு ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் பெட்ரோல் 1 லிட்டர் விலையில்லாமல் வழங்கியதோடு Bunக்கு எப்படி Cream அவசியமோ அதே போன்று Bikeக்கு Helmet கண்டிப்பாக அவசியம் என்று கூறி Cream Bunம் விலையில்லாமல் வழங்கினார்கள்.
இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கும்போது எப்போது இருசக்கர வாகனத்தை இயக்கினாலும் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை மாநகரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவருபவர்களை ஊக்கபடுத்தும் வகையில் ஏற்கனவே வருடம் முழுவதும் விலையில்லாமல் பெட்ரோல் வழங்கம் திட்டம் செயல்படுத்தி வருகிறோம் . இதுவரை சுமார் 500 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இவ்வாறு விலையில்லாமல் பெட்ரோல் வழங்கியுள்ளோம் . இந்தநிலையில் இன்று Bunக்கு எப்படி Cream அவசியமோ அதே போன்று Bikeக்கு Helmet கண்டிப்பாக அவசியம் என்று கூறி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விலையில்லாமல் பெட்ரோலும் Cream Bunம் வழங்கினோம் . இது போன்ற நூதன முன்னெடுப்புகள் மூலம் பொதுமக்களிடம் சாலைப்பாதுகாப்பு குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் சாலை விதிகளை மதித்து வாகனத்தை இயக்கி விபத்தில்லா தஞ்சையை உருவாக்குவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே கோவையில் பன் மற்றும் அதில் வைக்கப்படும் கிரீம்க்கு உள்ள GST வேறுபாடு குறித்து தனியார் உணவாக உரிமையாளர் மத்திய நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பியது சர்ச்சையான நிலையில் தஞ்சையில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விலையில்லாமல் பெட்ரோலுடன் கிரீம் பன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி , நிர்வாக உதவியாளர் குகனேஸ்வரி , களப்பணியாளர் அபர்ணா , தன்னார்வலர் ஆர்த்தி , கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பேட்டி
டாக்டர் பிரபு ராஜ்குமார்.