இலங்கை சேர்ந்த புது மாப்பிளை விசா நீட்டிப்பு வழங்க கோர …

The News Collect
2 Min Read
  • தமிழகத்தை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்த இலங்கை வாலிபருக்கு விசா நீட்டிப்பு வழங்க கோரி மனு தாக்கல்.

இலங்கையைச் சார்ந்த மனுதாரர் திருமணம் முறைப்படி நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வீசா நீட்டிப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. இடைபட்ட காலத்தில் மனுதாரரை இந்தியாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை வேண்டாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தல். இலங்கை தலை மன்னார் பகுதியைச் சேர்ந்த சரவணபவன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு,நான் இலங்கையை குடியுரிமையாக கொண்டவன் எனது அப்பாவின் அப்பா (தாத்தா) தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் நான் கடந்த மார்ச் 2024 ஆம் ஆண்டு மூன்று மாத சுற்றுலா விசா வில் இந்தியா வந்தேன்.

- Advertisement -
Ad imageAd image

பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த சிவசக்தி என்ற இந்திய குடியுரிமை பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதில் எனக்கு இந்திய ஆதார் அடையாள அட்டை இல்லாததால் எனது திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய முடியவில்லை இருந்தபோதும் இந்து கலாச்சார முறைப்படி கோவிலில் வைத்து உரிய ஆவணங்களுடன் திருமணம் செய்து கொண்டேன். தற்போது எனக்கு மூன்று மாத கால விசா முடிவடைந்ததால் எனது விசாவை கால நீட்டிப்பு கோரி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தேன் ஆனால் திருமணத்தை முறையாக சட்டரீதியாக பதிவு செய்த ஆவணங்கள் இல்லாததால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே எனது விசா கால நீட்டிப்பு செய்து உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதம் அலி, இந்திய குடியுரிமை பெற்ற ஒரு நபரை வெளிநாட்டை தேர்ந்தவர் திருமணம் செய்தால் அவருக்கு அதிக பட்ச ஐந்து வருட கால விசா நீட்டிப்பு செய்து கொடுக்கலாம் உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது எனவே அதனைப் பின்பற்றி வீசா நீட்டிப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார்.

 

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/on-the-occasion-of-world-tourism-day-fun-tour-for-students-of-narikkuvar-samukha/

இதனை பதிவு செய்த நீதிபதி ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவு தெளிவாக உள்ளதால் இலங்கையைச் சேர்ந்த மனுதாரருக்கு முறையாக திருமணம் நடைபெற்றதா என்பது குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து விசா நீட்டிப்பு வழங்க வேண்டும் அதுவரையிலும் மனுதாரரை இந்தியாவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.

 

 

 

Share This Article
Leave a review