ஐகோர்ட் உத்தரவு : லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டுமெனவும் , காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சியை தொடங்க அனுமதிக்க அரசு உத்தரவிடக்கோரி பட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டுடீயோஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பட தயாரிப்பு நிறுவனம், சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் , ஸ்ரீதேவன் ஆஜராகினர் . அரசு தரப்பில் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, கடந்த முறை ஒரு படத்திற்கு அதிகாலை நான்கு மணி காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிர் இழந்தார் . சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ள நிலையியல் அதனை அரசு தான் கையாள வேண்டும்.
காலை ஒன்பது மணிக்கு காட்சிகளை தொடங்க வேண்டும் என்பது தான் அரசு வகுத்துள்ள விதி அதனை மீற முடியாது . லியோ படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என்று தெரிந்ததால் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம் . இடை வெளி நேரத்தை குறைத்து கொண்டு ஐந்து காட்சிகள் திரையிட வாய்ப்புள்ளதா என்று திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் .

இதையடுத்து நீதிபதி , லியோ படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிடங்கள் என தெரிந்திருந்தால் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம் என்று அரசு தரப்பு கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது . அணைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
காலை ஏழு மணி காட்சிக்கு கூட அனுமதியில்லை என்றால் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு எதற்கு அனுமதி அளித்தீர்கள் ? ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்ததால்தானே சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கிறார்கள் .

இடைவெளி நேரத்தை குறைத்துக்கொண்டு ஐந்து காட்சிகள் திரையிடுவதாக இருந்தால் பாதுகாப்பு அம்சங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது . 850 திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் , அவர்களின் பணியையும் நினைத்து பார்க்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பிடம் தெரிவித்தார்.
இதையடுத்து , லியோ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவு விட முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சி தொடங்குவதற்கு அனுமதி கோரி அரசிடம் மனு அளிக்க பட தயாரிப்பு தயாரிப்பு நிறுவனத்திற்க்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த கோரிக்கை மனுவை திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து அதன் மீது மாலை நான்கு மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.