நாகை புதிய பேருந்து நிலையம் வாயில்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்தியவர்கள் அவ்வழியாக சென்ற எஸ்.பி. ஹர்ஷ் சிங் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் வாயில்களில் மது அருந்தினால் டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்படும் எச்சரிக்கை விடுத்து சென்றார்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் அனுமதியின்றி செயல்படும் மதுபான பார்களை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் மதுபான கடைகளுக்கு வருவோர், பேருந்து நிலைத்திற்கு செல்லும் வழிகளை அடைத்து நின்றும், மருத்துவமனை செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நின்று மது அருந்தி வருகின்றனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் இன்று புதிய பேருந்து நிலையம் வழியாக சென்றார். அப்போது பேருந்து நிலைய வாயில்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுபானம் அருந்தியவர்களை விரட்டி அடித்தார். தொடர்ந்து மதுபான கடை சென்ற அவர், மேற்பார்வையாளரிடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வழிகளில் நின்று மது அருந்தினால் கடைக்கு சீல் வைப்பேன் என எச்சரித்து சென்றார். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.