லியோ படத்தின் வெற்றியை, மாற்றுத்திறனாளிகளை மகிழ்வித்து, காஞ்சிபுரம் திரையரங்கில் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.
நடிகர் விஜய் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லியோ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.பி.கே தென்னரசு ஏற்பாட்டின் பேரில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 70-கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் காஞ்சிபுரத்தில் உள்ள பாபு திரையரங்கிற்கு வரவழைத்து திரைப்படத்தின் வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
பின்னர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட வந்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவசமாக திரைப்படத்தின் டிக்கெட் வழங்கப்பட்டு மகிழ்ச்சியுடன் படம் பார்க்க அனுமதித்தனர். படம் பார்க்க வந்த மக்களுக்கும் இனிப்புகளையும் கேக்குகளையும் வழங்கினார்கள். விஜய் மக்கள் இயக்கத்தினர் லியோ திரைப்படத்தின் வெற்றியை மாற்றுத்திறனாளிகளோடு கொண்டாடிய சம்பவம் படம் பார்க்க வந்த அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது.

லியோ திரைப்படம் வெளியான நாளன்று, திரைப்படம் பார்த்து முடித்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதியம் முதல் மாலை வரை சுடச்சுட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தலை வாழ இலையில் பிரியாணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருவது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான லியோ பத்து நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் லியோ படத்தின் வெற்றிவிழா குறித்த தகவல் வந்தது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். முன்னதாக லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு அதிகப்படியான கூட்டம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தார்கள். தற்போது லியோ படத்தின் வெற்றி விழா இந்த குறையைப் போக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் லியோ வெற்றி விழா நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழு திட்டமிட்டிருக்கிறது என்று காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது. விதிமுறைகளை காவல்துறை படக்குழுவுக்கு வலியுறுத்தி இருக்கிறது. லியோ இசைவெளியீட்டில் ஏமாற்றமடைந்த ரசிகர்களை திருப்திபடுத்த இந்த முறை எப்படியாவது படக்குழு வெற்றி விழாவை நடத்தும் என்று எதிர்பார்க்கலாம்.