தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களின் மருத்துவ தேவைகளுக்கு அரசு மருத்துவமனைகளை தான் நம்பி இருக்கிறார்கள்.அந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களும் சரி வர நோயாளிகளை பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது.பல அரசு மருத்துவமணைகளில் மருத்துவரை தவிர்த்து மற்ற பணியார்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்க்கமுடிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் காயமடைந்த நோயாளிக்கு, துப்புரவு பணியாளர் ஒருவர் தையல் போட்டு சிகிச்சை அளிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.அதே போன்று விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளி ஒருவருக்கு மருத்துவமனை காவலாளி ஊசி போட்டு சிகிச்சை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்களும், செவிலியர்களும் சரியாக பணிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு இரவு காவலாளியாக பணியாற்றும் தேவேந்திரன் என்பவர், நோயாளிகளுக்கு ஊசி போடுவது, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆபத்தான இந்த செயலை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

சட்டவிரோதமாக இந்த சேவைகளை வழங்குவதற்காக சில நேரங்களில் நோயாளிகளிடம் இருந்து தேவேந்திரன் பணம் வசூல் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏழை மக்கள் எதுவும் கேட்காமல் சிகிச்சை பெற்று செல்லும் நிலை தான் இந்த மருத்துவமனையில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.பணியில் இருக்கும் மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஏற்படுகிறது.
முன்னதாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் காயமடைந்த நோயாளிக்கு, துப்புரவு பணியாளர் ஒருவர் தையல் போட்டு சிகிச்சை அளிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்து இணை இயக்குனர் மருத்துவ பணிகள் பிரேமலதா உத்தரவிட்டார்.
தென்காசியில் நடைபெற்றது போல ஒரு நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.இந்த மருத்துவனை மட்டுமல்லாமல் பல அரசு மருத்துவமனைகளில் இதே தான் தொடர்கிறது என்பது பொது மக்களின் குற்றச்சாடாக உள்ளது.மாவட்ட நிர்வாகமும்,மருத்துவத்துறையும் நடவடிக்கை எடுக்குமா?