பசும்பொன் தேவர் குரு பூஜை அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

2 Min Read
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

- Advertisement -
Ad imageAd image

அக்டோபர் 30, 1908 இல் பிறந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. இவரது பெற்றோர் உக்கிரபாண்டி தேவர், இந்திராணி அம்மையார். இவர்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் ஒரே மகனாவார். இவரது சிறு வயதில் தாய் இறந்துவிட கல்லுப்பட்டி கிராமத்தில் பாட்டியிடம் வளர்ந்து வந்தார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் ஆவார். மூன்று முறை, அவர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமூகத்தினர் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளான அக்டோபர் 30 ஆம் தேதியை தேவர் ஜெயந்தியாக அனுசரிக்கின்றனர்.

தேவர் சிலை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மதுரை பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நடைபெறுவது வழக்கம்.இந்த நிகழ்வில் அரசியல் கட்சியினர் பெருமளவு கலந்து கொள்வார்கள்.அதற்காக அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்வது வழக்கம்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை இன்று நடைபெறும் நிலையில், மதுரை நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி முதல் நாள் தேவரின் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குருபூஜை விழாவாகவும் நடைபெறும். அதன்படி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா பசும்பொன்னில் தொடங்கியது.

இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேவர் குருபூஜை நடைபெறும். மதுரை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

தங்க கவசம்

சிலை,தங்க கவசம்

தமிழக அரசியல் வரலாற்றில் இன்றும் தேவரின் பிறந்த நாள் முக்கிய இடம் வகிக்கிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி முதல் ஜெயலலிதா வரை முத்துராமலிங்கத் தேவருக்கு முக்கியத்துவம் அளித்து வந்தனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை வைத்தார். அவரது சொந்த ஊரான பசும்பொன்னில், மறைந்த தலைவருக்கு கருணாநிதி நினைவிடம் கட்டினார். 1994-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13.5 கிலோ தூய தங்கக் கவசத்தை வழங்கினார். இன்றும் தேவரின் நினைவு நாளில் அவருக்கு சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது.

தேவர்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்தநிலையில், நாளை தேவர் குருபூஜை நடைபெற உள்ள நிலையில், மதுரையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, மதுரை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை நகருக்குள் நாளை காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவர் சிலை அமைந்துள்ள கோரிப்பாளையம் பகுதியில் விழாவிற்கு வருகை தரும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.பசும்பொன் செல்லும் பிற மாவட்ட வாகனங்கள் மதுரை நகருக்குள் வராமல் சுற்றுச் சாலை வழியாகச் செல்ல வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review