இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த புறத்தில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட செயலாளர் அன்சர் தீன் , சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டது

.8மணி நேர வேலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் நினைவாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் தான் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் முதல் முறையாக மே தினத்தை 1923ல் கொண்டாடினார். அதன் நூற்றாண்டு நிறைவு இந்த மேதினம். அதே கடற்கரையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில்
8மணி நேர வேலை நேரத்தை பறித்து 12மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்படுவது தமிழ்நாடு அரசுக்கு அழகல்ல எனவே தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் தொழில் மையங்களில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் மாவட்ட செயலாளர் அன்சர்தீன் தலைமையில்
தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி 100க்கு மேற்பட்ட
முழக்கமிட்டனர்.