தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே 27 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டைட்டில் பார்க் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைசர் டி.ஆர்.பி. ராஜா, “டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனொரு பகுதியாக தஞ்சை டைட்டல் பார்க் விரைவில் வரவுள்ளது. பணிகள் நிறைவடைந்த உடன் பெரிய நிறுவனங்கள் வரவுள்ளன. இதனால் தொழில் முனைவோருக்கும், இளைஞர்களுக்கும் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,
டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறதுதஞ்சையில் டைட்டல் பார்க் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறதுபணிகள் முடிந்தவுடன் மிகப்பெரிய நிறுவனங்கள் வரவிருக்கின்றன அதன் மூலம் தொழில்முனைவோருக்கும், இளைஞர்களுக்கும் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றவர்
தமிழக முதல்வர் கண்ணை இமை காப்பதுபோல் காத்து வருவதால், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தையோ, சுற்றச்சூழலையோ பாதிக்கக்கூடிய தொழில்பேட்டைகள் எதுவும் எந்த காலத்திலும் வராது என்றவர்,விவசாயம் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிக்காத தொழில்பேட்டைகள் மட்டுமே அமையும் என்றார்
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தஞ்சையில் பயணிகள் விமான போக்குவரத்து விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும், அதற்கான முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தஞ்சையில் விமானபடை தளத்தின் ஒரு பகுதியில் பயணிகள் விமான போக்குவரத்து விரைவில் துவங்க உள்ளது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றவர்
ஒசூரிலும் பயணிகள் போக்குவரத்துக்கான விமான சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தனியார் விமான நிறுவனமான ஏர் டாக்ஸி அறிவித்துள்ளது. சிறு நகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து சென்னைக்கு முதற்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறு ரக விமான சேவை தொடங்கப்படுகிறது. அதேபோல, நெய்வேலியில் இருந்து சென்னைக்கும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 1990ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை – சென்னை விமான சேவை பின்னர் பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்த விமான சேவை மூலம் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன் பெறலாம்.
super