இன்று முதல் வாகனங்களுக்கான ‘பாஸ்டேக்’ தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி 5 ஆண்டுகள் பழமையான பாஸ்டேக்குகள் மாற்றப்பட வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்த பாஸ்டேக்குகள் கே.ஒய்.சி.(know your customer) விவரங்களுடன் புதுப்பிக்கப்பட வேண்டும். வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும் தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் (NPCI) அறிவித்தபடி, FASTags க்கான புதிய விதிமுறைகள், மின்னணு கட்டண வசூல் முறை இன்று முதல் (ஆகஸ்ட் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கணிணி எளிதாக பாஸ்டேக்குகளை அடையாள கொள்ளும் வகையிலும், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
FASTag விதிகள் மற்றும் காலக்கெடு: தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் அறிவித்துள்ள புதிய விதிகளின் படி பாஸ்டேக் பயன்படுத்துவோர் கேஒய்சி விவரங்களை அக்டோபர் 31க்குள் தெரிவிக்க வேண்டும். அதாவது அக்டோபர் 31ம் தேதிக்குள், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் பாஸ்டேக்குகளை வாங்கியவர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும். அதேநேரம் ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆக்கிவிட்டது என்றால், பாஸ்டேக்குகளை முழுமையாக மாற்ற வேண்டும். இதனையும் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் செய்ய வேண்டும். இன்று முதல், பாஸ்டேக் பயன்படுத்துவோர், பாஸ்டேக்குடன் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். புதிய வாகன உரிமையாளர்கள் தங்கள் பதிவு எண்ணை வாங்கிய 90 நாட்களுக்குள் அப்டேட் செய்ய வேண்டும்.
பாஸ்டேக் பயன்படுத்துவோர் அதனை சுங்கச்சாவடிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் வாகனத்தின் முன்பக்கத்தில் கண்டிப்பாக தங்கள் பாஸ்டேக்குகளை ஒட்ட வேண்டும். அத்துடன் பாஸ்டேக்கை மொபைல் எண்ணுடன் இணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.பாஸ்டேக் ஸ்டிக்கர் இருந்தாலும் சுங்கச்சாவடியில் இனி இரண்டு மடங்கு கட்டணம்.. இந்த தப்பை செஞ்சுடாதீங்க இந்த புதிய விதிகள் பாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.. குறிப்பாக பழைய வாகனங்கள் அல்லது பழைய பாஸ்டேக் பயன்படுத்துவோரை கணிசமாக பாதிக்கும். இந்த விதிமுறைகளுக்கு மாறாவிட்டால், சுங்கச்சாவடிகளில் தேவைற்ற சிரமங்கள் ஏற்படும். உங்கள் பாஸ்டேக் செல்லாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் பாஸ்டேக் வாங்கிய தேதியை பாருங்கள். ஒருவேளை 3-5 வருடத்திற்குள் பாஸ்டேக் வாங்கி இருந்தால், அக்டோபர் 31 க்கு முன் KYC அப்டேட் செய்து முடிக்க வேண்டும். வருடங்களுக்கும் மேலான பாஸ்டேக் என்றால் அடியோடு மாற்றிவிடுங்கள். அதேநேரம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் உங்கள் வாகனத்தின் பதிவு மற்றும் சேஸ் எண்கள் பாஸ்டேக் உடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யுங்கள்.