மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்களும் அரசியல் கட்சியினரும் ஆவலோடு காத்திருக்கும் நிலியில் இந்தியாமுழுவதும் கட்சிகள் தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகின்றன.தமிழகத்திலும் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டானர். வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் 10 முதல்15 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8-ல் வெற்றியை பதிவு செய்தது.

2019 மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்திடம் காங்கிரஸ் வேட்பாளர் தற்போதைய ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரியிடம் 2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் 10-15 தொகுதிகள் வரை கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.திமுக கூட்டணி இதற்கு ஒத்துக்கொள்ளுமா என தெரியவில்லை ஆனாலும் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
இதனால் இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் திமுகவிடம் 10-15 தொகுதிகள் வரை கேட்கும் எனக் கூறப்படுகிறது. சென்ற 2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக மகத்தான வெற்றியை பதவு செய்தது.இந்தத் தேர்தலில் காங்கிரஸ் திருவள்ளுவர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தேனி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்டது.

இதில் தேனியை தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. தேனியில், முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திடம் காங்கிரஸ் வேட்பாளர் தற்போதைய எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தோல்வியை தழுவினார்.இப்போது இந்த தொகுதி எம்.பி எந்த கட்சியில் இருக்கிறார் என்ற குழப்பம் மக்களிடம் இருக்கிறது.
கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சந்தித்த அதிமுக இம்முறை தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது. காங்கிரஸ் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்தக் கூட்டணியில் கடைசி நேரத்தில் மேலும் சில கட்சிகளும் இணையக் கூடும் என்றும் கூறப்படுகிறது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 8 அல்லது 9 இடங்கள் வழங்கப்படலாம் என தெரிகிரது.எவ்வளவு இடங்கள் என்பது தேசிய தலைமைக்கு முக்கியமில்லை எப்படியாவது பிஜேபி கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உள்ளதாக தெரிகிறது.