திருவையாறு அருகே முகமது பந்தர் ரஹீம் நகரை சேர்ந்தவர் முகமது காசிம் ,முகமது பந்தர் ஜமாத் தலைவராக இருந்து வருகிறார்கள். இவருக்கு நேற்று முன்தினம் தனியார் கொரியரில் இருந்து தொலைபேசி மூலம் பேசி முகமது காசிம் என்ற பெயரில் பார்சல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பார்சல் வாங்க முடியவில்லை. மாலை 7 மணி அளவிற்கு கொரியர் அலுவலகத்தில் இருந்து பார்சல் கொண்டு வந்து கொடுத்து சென்று உள்ளனர்.
பார்சலை வாங்கி பிரிக்காமல் நேற்று தனது மகன் முகமது மஹாதிரை விட்டு பிரித்துப் பார்க்க சொல்லி இருக்கிறார் காசிம் . பார்சலை பிரித்து பார்த்த மஹாதீர் மண்டை ஓடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் துர்நாற்றம் வீசி உள்ளது. உடனடியாக இதுக்குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின்பேரில் திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் மண்டை ஓட்டை கைப்பற்றி விசாரணை செய்தனர் வந்தனர்.

இதில் பார்சலை டெலிவரி செய்த நபரிடம் விசாரித்ததில் இந்த பார்சல் பாபநாசம் கொரியர் அலுவலகத்தில் இருந்து வந்தது தெரியவந்தது. அடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் இந்த கொரியரை அனுப்பியவர்கள் தஞ்சை கீழவாசல் எஸ்.என்.எம் ரகுமான் நகரை சேர்ந்த அப்துல்லா, தஞ்சை கீழவாசல் ராவுத்தர் பாளையத்தை சேர்ந்த முகமது முபின் உள்ளிட்ட மூன்று பேர் என்பது தெரிய வந்தது.
இதில் இருவரை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் இருந்து மூன்று மண்டை ஓடுகளை எடுத்து எலுமிச்சைபழம் ,குங்குமம் ,மண்டை ஓடு, பொம்மைகளை வைத்து மாந்திரீகம் செய்த பின்னர் கிப்ட் பேப்பர் கொண்டு பார்சல் செய்து தஞ்சையில் இரண்டு ஜமாத் தலைவர்கலுக்கு அனுப்பியது தெரியவந்தது. மீதமுள்ள இரண்டு ஜமாத் தலைவர்களுக்கு நேற்று தான் பார்சல் சென்று உள்ளது.இந்த பார்சலை பிரிக்காத நிலையில் அவர்களுக்கு போன் செய்து பிரிக்க வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மண்டை ஓட்டை அனுப்பி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர.மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.