வட இந்திய உணவான பாணி பூரியில் மாம்பழ சாற்றை ஊற்றி சாப்பிடும் விடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வட இந்திய உணவான பானிபூரியை தற்போது தமிழ்நாட்டில் அனைவர்க்கும் பிடித்த உணவான மாறிவிட்டது. ஸ்ட்ரீட்ஃபுட் எனப்படும் உணவுகளில் இதுவும் முக்கியமான ஒன்று. மாலை வேளைகளில் பானிபூரியை அனைவரும் விரும்பி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போதைய காலங்களில் உணவு வகைகளில் தங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்து சாப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஐஸ்க்ரீமை வைத்து பாணிபூரி, சாக்லேட்டை வைத்து பாணி பூரி வைரலாகி வந்தது.

பொதுவாக பாணி பூரியில் சென்னா மசாலா, புளிப்பு கலந்த காரமான தண்ணீர் கலந்து சாப்பிடுவர்.அனால், இங்கு ஒரு கடைக்காரர் பாணி பூரியில் சென்னா மசாலாவை வைத்து அதனுடன் மாம்பழ சாற்றை ஊற்றி விற்பனை செய்து வருகிறார். இந்த வகையான பாணி பூரி சிலருக்கு பிடித்தமான உணவாக இருந்தாலும், சிலருக்கு ஏற்றுக் கொள்ளாத உணவாகவும் இருக்கிறது.
தற்போது, பாணி பூரியில் மாம்பழ சாற்றை ஊற்றி சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.