பாலஸ்தீனம் போர் அம்பேத்கரிய, பெரியாரிய ,மார்க்சிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்..!

2 Min Read
அம்பேத்கரிய, பெரியாரிய ,மார்க்சிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தில் போர் நடைபெறும் நிலையில் பாலஸ்தின அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து கோவை டாடாபாத் பகுதியில் அம்பேத்கரிய, பெரியாரிய ,மார்க்சிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டாண்டு காலமாக நடக்கும் இஸ்ரேல், பாலஸ்தீன சண்டை போர் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு விதமாக நீடிக்கிறது. கொடிய மரணங்களையும், மிகக்கொடூரமான வாழ்வியல் சூழலையும் ஏற்படுத்துகிறது.

- Advertisement -
Ad imageAd image

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையேயான போர் உக்கிரமடைந்திருக்கிறது. காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் போரில் கண்மூடித்தனமாக தாக்குதலில் இதுவரை 2,400 குழந்தைகள் உள்பட 6,500 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், உலகின் பல நாடுகள் இஸ்ரேல் பக்கமும் பாலஸ்தீனம் பக்கமும் ஆதரவாகப் பிரிந்து நிற்கும் நிலையில், தொடக்கம் முதலே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கி வருகிறது.

பாலஸ்தீனத்தில் போர் குறித்து அம்பேத்கரிய, பெரியாரிய ,மார்க்சிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தில் போர் நடைபெறும் நிலையில் பாலஸ்தின அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து கோவை டாடாபாத் பகுதியில் அம்பேத்கரிய, பெரியாரிய ,மார்க்சிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை மட்டுமே நடத்தி வருகிறது. தரைவழித்தாக்குதல் தொடங்கும் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் அது தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பேரில் தான் தரைவழித்தாக்குதல் தாமதமாவதாக கூறப்பட்டது.

பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடியை கண்டித்தும், கோவை டாடாபாத் பகுதியில் அம்பேத்கரிய, பெரியாரிய ,மார்க்சிய அமைப்புகள் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலஸ்தீனத்தில் போர் குறித்து அம்பேத்கரிய, பெரியாரிய ,மார்க்சிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் பெரியாரிய, மார்க்சிய, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்கும் அமெரிக்க அரசை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமரை கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Share This Article
Leave a review