- கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பட்டம் பழைய தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் பிரபாகரன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார் இவருக்குத் திருமணமாகி குழந்தை இல்லாத விரத்தியில் நேற்று இரவு வீட்டிலிருந்து புறப்பட்டு திருப்பனந்தாள் கடைவீதியில் உள்ள மதுபான கடையில் மதுவை வாங்கிக்கொண்டு மண்ணியாறு பாலத்தின் மேலே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாகப் பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக வந்த அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் மண்ணியாரு ஆற்றில் மிதந்து வந்தவரைப் பிடித்து கரைக்குக் கொண்டு வந்து திருப்பனந்தாள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர் கரிகாலச் சோழன், உதவி ஆய்வாளர் வினோத், மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்ததில் அவர் பட்டம் பகுதி சேர்ந்த பெயிண்டர் பிரபாகரன், என்று தெரிய வந்தது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/special-assistant-inspector-was-killed-in-a-lorry-collision-in-pattukottai-the-body-was-cremated-with-state-honors/
உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது