சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்றுபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் சமூகநீதியை தழைக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்களில் அண்ணல் அம்பேத்கருக்கு அடுத்த முதன்மையானவர் வி.பி.சிங். அரச குடும்பத்தில் பிறந்தாலும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு இட ஒதுக்கீடு முக்கியம் என்பதை உணர்ந்து மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியவர் அவர்.

வி.பி.சிங் அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் சமூகநீதி தழைக்கவும், சமூகநீதிக்கொடி உயரப் பறப்பதை உறுதி செய்யவும் நாம் உழைக்க வேண்டும். அதுவே சமூகநீதி நாயகனுக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.