வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – ஓபிஎஸ் கண்டனம்..!

1 Min Read
ஓ.பன்னீர்செல்வம்

வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது என்ற புகார் பரவியதையடுத்து, இன்று அமைச்சருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்

திரையில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review