வழக்கம் போல் இயங்கும்…. தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்.

2 Min Read
ஆம்னி பேருந்து

கூடுதல் கட்டணம்

- Advertisement -
Ad imageAd image

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இன்று சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்கு பலரும் திரும்ப முன்பதிவு செய்துள்ளனர்.. ஆனால் என்ன சிக்கல் என்றால், பொதுவாக தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு அதிகமாக இருக்கும். 600 ரூபாய் என்றால் 1200 ரூபாயும். 1000 ரூபாய் என்றால் 2000 என்கிற அளவில் கட்டணம் இருக்கும். 750 ரூபாய் என்றால் 1500 என்கிற அளவில் கட்டணம் இருக்கும். அந்த வகையில் இந்த முறையும் கட்டணம் அதிகமாகவே இருந்தது.

ஆம்னி பேருந்து

இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரில் தமிழகம் முழுவதும் சுமார் 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்த முறை அதிரடியாக சிறைபிடித்தனர். அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவித்துள்ளனர்.

பேருந்துகள் முன்பதிவு

பலரும் சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு திரும்ப பேருந்துக்கு இன்று முன்பதிவு செய்துள்ள நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் எழுந்தது. இன்றுடன் தொடர் விடுமுறை முடியும் நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்தது. இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டிருக்கிறோம்.

பேருந்து

ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக்.. உண்மையில் என்ன காரணம்? அமைச்சர் சிவசங்கர் பரபர விளக்கம்!

ஆனால் கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்யணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிககட்டணம் புகார் இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கி கொண்டிருந்த 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின் படி சிறைபிடித்துள்ளனர்.

ஆம்னி பேருந்துகள் இயக்கம்

பின்னர் அரசு தரப்பில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு முக்கியமான சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டது.பின்னர் ஆம்னி பேருந்துகள் மாலை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a review