தமிழ்நாட்டில் தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளால் , பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஒருபுறம் அரசியல் கட்சித்தலைவர்கள் ஆன்லைன் சூதாட்ட தடையை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தவரும் நிலையில் , திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் , ஆன்லைன் சூதாட்டத்திற்கு துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் உற்பட இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில், மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தவர் இசக்கிமுத்து மகன் ரவிச்சந்திரன் (வயது 37). தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவி மற்றும் அவரது 6 வயது குழந்தஹியுடன் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார்.
மனைவியும், மகனும் ஊருக்குச் சென்றிருந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நீண்ட நேரம் ஆகியும் ரவிச்சந்திரன் வீட்டைவிட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ரவி சங்கர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
மேலும் போலீசார் விசாரணையில் ரவிச்சந்திரன் ஆன்லைன் சூதாட்டத்திற்காக , நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து 7 லட்சம் ருபாய் வரையிலும் கடன்வாங்கி இருந்ததாகவும் அதனை திருப்பி கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர் .
இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸார் அங்கு சென்று ரவிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் ஒருவர் பலி :
இதேபோன்று திருச்சி மாவடடம், மணப்பாறை அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 26). வடை, பஜ்ஜி போடும் பலகார மாஸ்டராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவைக்கு வேலைக்குச் சென்ற இவர் மூன்று நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டினுள் தூக்கிபோட்டுள்ளார். உயிருக்கு போராடியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான வில்சன் கடன் வாங்கி ரம்மியில் பணத்தை இழந்த நிலையில் கடன் பிரச்சினையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட தெரியவந்துள்ளது .

பாமக தலைவர் கண்டனம் .
ஞாயிற்றுக்கிழமை இறந்த ரவிச்சந்திரன் குடும்பத்தார்க்கு , தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்து கொண்ட அன்புமணி ராமதாஸ் , ரவிச்சந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சம் ருபாய் வரை கடனாளி ஆகியிருந்தார் . அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்ட மோகத்திலிருந்து மீள முடியாத ரவிச்சந்திரன் மேலும் பல லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார் .
ஆன்லைன் சூதாட்டம் எவ்வாறு அதற்கு அடிமையான ஒருவரை கடனாளியாக்கி, தற்கொலை செய்து கொள்ள வைக்கும் வரை விடாது என்பதற்கு ரவிச்சந்திரனின் வாழ்க்கை தான் சான்று. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 48-ஆவது தற்கொலை இது. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த 19-ஆவது தற்கொலை. புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த முதல் தற்கொலை. இது தொடர்கதையாகிவிடக்கூடாது.
ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை ஆளுனர் உணர வேண்டும். எனவே, இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .