வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி,ஜோதி வழிபாடு மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம்..!

2 Min Read
  • வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி பொன்னேரியில் வள்ளலார் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் ஜோதி வழிபாடு மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சின்னக்காவனம் பகுதியில் உள்ள திரு அருட்பிரகாச வள்ளலார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் வள்ளலாரின் 202 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை ஒட்டி ஜோதி தரிசனம் நடைபெற்று பின்னர் திருப்புகழ் பாடல் பாடப்பட்டது தொடர்ந்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்புனருமான சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்தார் பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத் வெற்றிவேல் ராமலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

- Advertisement -
Ad imageAd image

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஓர் இந்து சமய ஆன்மீகவாதி ஆவார். “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாகச் சாடினார்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் “சத்ய ஞான சபை” என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/a-thanjavur-student-won-gold-medal-in-an-international-silambam-competition/

எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளை கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக் கொள்கையாக ‘கொல்லாமை’ கொள்கை ஆகிய உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர். “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையை கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007ஆம் வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.

Share This Article
Leave a review