புரட்டாசி மாத நான்காம் வார சனிக்கிழமை முன்னிட்டு : ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவிலில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்.!

2 Min Read
  • தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவில் புரட்டாசி மாத நான்காம் வார சனிக்கிழமை சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் புலவர்நத்தம் ஊராட்சி உட்பட்ட அண்ணாநகருக்கும் தென்புறம் உள்ள 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தன் தோன்றிய பழமை வாய்ந்த ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் நான்கு வாரமும் சனிக்கிழமை தோறும் காலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் என்று நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் விநாயகர்,முருகன்,ஆஞ்சநேயர்க்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது இக்கோயில் செல்லும் வழியில் கோயிலை சுற்றி பசுமை நிறைந்து காணப்படுகிறது கோயில் சிறப்பு பெருமாள் ஸ்ரீதேவியுடன் அமர்ந்தபடி ஸ்ரீ வள்ளவ பெருமாள் தரிசனம் தருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இத்தலத்தில் தோஷம் போக்கும் நினைத்த காரியங்கள் நடைபெறும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. என்பதால் வாரம் தோறும் இப் பெருமாள் தரிசனம் செய்து வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இன்று புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாளுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா
தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
இந்த கோவில் வழிப்பாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றன.

ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது. பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/on-the-occasion-of-the-fourth-saturday-of-the-month-of-puratasi-perumal-departure-and-theerthawari-were-held-in-a-chariot/

புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரியதாக பார்க்கப்படுகின்றது. புதன் பகவான், அதி தேவதையாக மகா விஷ்ணு உள்ளார். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் மகாவிஷ்ணுவின் அருளை பெற்று தரும். தனின் வீடு கன்னி ராசியாகவும், அது பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார். அதனால் இந்த மாதத்தில் பெருமாளுக்கு பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற்சவம் செய்யப்படுகிறது. சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிக விஷேசமாகப் பார்க்கப்படுகின்றது.

Share This Article
Leave a review