- புரட்டாசி மூன்றாம் வாரத்திருவிழாவை முன்னிட்டு மத்ராவேடு வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மத்ராவேடு கிராமத்தில் அருள்மிகு ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் வாரத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு வண்ண வண்ண மலர் அலங்காரத்தில் ராதா ருக்மணி சகிதமாக பெருமாள் பொன்னாபரணங்களுடன் ஜொலித்தபடி கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பெருமாளுக்கு உகந்தமான புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், சுண்டல், வடை உள்ளிட்ட ஒன்பது வகையான பலகாரங்களும் விதவிதமான பழங்களும் படையலிடப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து எம்பெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.இதையடுத்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ பெருமாள் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிறப்பம்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.கோலாகலமாக நடைபெற்ற விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்து சென்றனர்.
ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது. பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/on-the-occasion-of-vallalars-202nd-birthday-jyoti-worship-and-almsgiving-to-a-thousand-people/
புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரியதாக பார்க்கப்படுகின்றது. புதன் பகவான், அதி தேவதையாக மகா விஷ்ணு உள்ளார். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் மகாவிஷ்ணுவின் அருளை பெற்று தரும். தனின் வீடு கன்னி ராசியாகவும், அது பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார். அதனால் இந்த மாதத்தில் பெருமாளுக்கு பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற்சவம் செய்யப்படுகிறது. சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிக விஷேசமாகப் பார்க்கப்படுகின்றது.