கேரள மாநிலம் சபரிமலையில், மகரவிளக்கு ஏற்றப்படும் பொன்னம்பலமேடு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
வனத்துறை மற்றும் காவல்துறையினர் அனுமதியின்றி யாரும் நுழைய முடியாத இந்த பகுதியில், தமிழ்நாட்டில் தனியாக கோயிலை நிர்வகித்து வருபவரான நாராயணசாமி உள்ளிட்ட 5 பேர் பூஜை நடத்திய வீடியோ வெளியானது.
வீடியோவில், நாராயணசாமி தலைமையில் பூஜை நடைபெறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
தேவசம்போர்டு அளித்த புகாரின் பேரில், கேரள மாநில காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதே போன்று, அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்ததாக 5 பேர் மீதும் வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.