அதிமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்.

1 Min Read
  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது .

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் மேலூர் பஜாரில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் தாங்கினார் அப்போது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கழக மருத்துவமனை செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் பேசுகையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட கூடிய ஒரே கட்சி தமிழகத்தில் உள்ளது என்றால் அது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனவும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்து வீட்டை ஒழிப்போம் என உதயநிதி தெரிவித்தார்.

ஆனால் 50000 கையெழுத்து வாங்கி கூட நீட்டை ஒழிக்க முடியவில்லை என குற்றம் சாட்டிய அவர் பொய் வாக்குகளை கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக இனி வெற்றி பெற முடியாது என தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன் ராஜா, சக்கரபாணி மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் திமுக உள்ளிட்ட மாற்ற கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுக இளைஞர் அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் சார்பில் தெரிவித்து வரவேற்றார் பின்னர் 100 பேருக்கு தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a review