100-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி

2 Min Read
100 வது பிறந்த நாள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் இவரது மனைவி சீனியம்மாள், இவருக்கு 5 மகன்களும் 4 மகள்கள் இதில் ஒரு மகன் ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது 100-வது பிறந்த நாளை இன்று 5 தலைமுறை பேரன்கள், பேத்தியுடன் கொண்டாடினார்.

- Advertisement -
Ad imageAd image

சீனி அம்மாள் சிறுவயது முதல் இன்று வரை சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது பேரன் பேத்திகள் ஹோமியோபதி ஆயுர்வேதிக் போன்ற படிப்புகளை படித்து மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இவர் தனது 75 வது வயதில் கணவனை இழந்த நிலையில் இவர் முழுமையாக கீரை வகை, நாட்டு சுண்டைக்காய்,பச்சை காய்கறிகள், நாட்டுக்கோழி ஆகியவற்றை சிறப்புகளை அறிந்து  அன்று முதல் ஆரோக்கியமான உணவுகளை உண்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது 100 வயது கடந்த போதிலும் சமையல் செய்வது தினம்தோறும் மற்ற வேலைகளை ஆரோக்கியமாகவும் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது 100-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட குடும்பத்தைச் சேர்ந்த மகன்கள் மற்றும் பேரன்கள் முடிவு செய்தனர். இதை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று அதையொட்டி தனது சொந்த கிராமமான நத்தம் அருகே உள்ள லிங்கவாடியில் இவரது 7 மகன், மகள்கள் 23 பேரன், பேத்திகள் 27 கொள்ளு பேரன், பேத்திகள், எள்ளு பேரன் பேத்திகள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 85 பேர் இன்று வீட்டிலிருந்து   கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக வந்து மந்தை அருகே உள்ள கோயிலில் மரக்கன்றுகளை நட்டு மேலும் விநாயகரே வழிபாடு செய்து ஊர்வலமாக ஆரவாரத்துடன் வெடி வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

தொடர்ந்து மண்டபத்தில் வைத்துள்ள சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது.‌‌அதைத்தொடர்ந்து மூதாட்டி  சீனியம்மாளுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி தனது 100வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a review