16 வயதினிலே திருமணம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்.எம்பி பெயரில் திருமணம் பத்திரிகை அச்சடித்த அதிர்ச்சி

1 Min Read
16 வயதினிலே திருமணம்

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடந்து வருவதாக சொல்லப்பட்டிருந்த புகாரின் அடிப்படையில் சமூக நலத் துறையினர் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த நிலையில்.

- Advertisement -
Ad imageAd image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மற்றும் அவரது மனைவி வெற்றிச்செல்வி இவர்களின் பெண் குழந்தை வயது 16 அதே ஊரில் வசித்து வரும் மாது சபரியம்மாள் அவர்களது மகன் நாகமணி என்பவருக்கும் திங்கள் கிழமை காலை 7:30 மணி அளவில் திருமணம் நடைபெற்றது.

குழந்தை திருமணத்தை ஒழிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட எம் பி செல்வக்குமார் தலைமையில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக அச்சடித்த பத்திரிக்கை விநியோகம் செய்யப்பட்டு உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறார் மற்றும் பெண் குழந்தைகள் நல பாதுக்காப்பு அமைப்பினர் பெயரளவில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு தரப்பு பெற்றோர்களிடமும் திருமணம் செய்யவில்லை என  எழுதி வாங்கியதாகவும்,‌‌தாலி கட்டவில்லை என கூறி வழி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள் வந்து சென்ற நிலையில் அவர்கள் குறித்த திருமண வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share This Article
Leave a review