திருவள்ளூர் அருகே அரசுக்கு முறையான பணம் செலுத்தாமல் இயங்கி வந்த மதுக்கூடத்திற்கு அதிகாரிகள் சீல்
திருவள்ளூர் மாவட்டம் தலக்காஞ்சேரி பகுதியில் குப்பைமேடு அருகே அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது.

இதன் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான மதுக்கூடம் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அரசுக்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்தாமலேயே அலட்சியம் காட்டியபடி மதுக்கூடம் நடத்தி வந்திருந்த நிலையில் பணத்தை கட்ட கோரி அதிகாரிகள் சென்று பல முறை எச்சரித்தும் அதனை ஏற்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று திடீரென சென்ற டாஸ்மாக் மாவட்ட மேளாளர் ஜெயக்குமார், மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் ஆய்வாளர் தேவிகா மற்றும் காவல்துறையினர் மதுக்கூடத்தை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். இதானால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.