வேலூர் கலெக்டர் வளாகத்தில் நேற்று மக்கள் கூரைத்திற்கும் முகாம் நடைபெற்றது அக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார், மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார்.
மாவட்டத்தில் இருந்து பல்வேறு மக்கள் தங்கள் குறைகள் மற்றும் பூகார்களை மனுக்கள் மூலமாக வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அணைத்து மாவட்டங்களிலும் உள்ள கலெக்டர் வளாக முகப்பில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காவலர் சோதனை சாவடி வைத்து கண்காணிக்கப்படுவது வழக்கம்.
இதே போல் நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கும் போலீஸ் பந்தபோஸ்த் போடப்பட்டு இருந்தது . இந்நிலையில் மஞ்சுளா வயது (42) அவர்கள் எடுத்துவந்த பையை சோதனை செய்த போது அதில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் ஒன்று மறைத்து வைத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார்அந்த பெண்மணியிடம் விசாரணை நடத்தினர் .
விசாரணையில் அவர் பெயர் மஞ்சுளா மற்றும் அவருடன் இருந்தது அவர்களின் மகள்கள் என்றும் அணைக்கட்டு அருகே பனந்தோப்பு பட்டியில் வசித்து வருவதாகவும் . தனது கணவர் இறந்துவிட நிலையில் குடும்ப சொத்து பிரச்சினை காரணமாக அவரையும் அவரது நான்கு மகள்களையும் அவரது உறவினர்கள் வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாகவும் , எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் ,குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள மண்ணெண்ணெய் பாட்டில்வுடன் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்ததாகவும் தெரிவித்தார் .
இதனை அடுத்து மஞ்சுளாவை சமாதானம் செய்த போலீசார் , அவரை சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .