ஒடிசா ரயில் விபத்து – ‘தொலைந்து போயிருக்கலாம் ஆறுதலாவது உண்டு’ – இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல்!
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,”தொலைந்து போயிருக்கலாம் ஆறுதலாவது உண்டு, தென்னங்கீற்று பந்தல் சிந்தும் ஒளியென நம்பிக்கையிருக்கும் திரும்ப வரலாம்மென்ற நினைப்பு, நினைப்பே உயிர் ஜோதி வளர்க்கும்.
வாழ போனவர்கள் திரும்ப வருகையில் நிகழும் பயணங்கள் மீதான காலத்தின் விபரீதப் போர் கோர விபத்துகள், விபத்துக்கு பின்னிருக்கும் ஒரு கவனமின்மை அக்கவனமின்மைக்கு பின்னே நான் போகவில்லை, இறப்பின் அஞ்சலி செலுத்தும் நேரமிது.
பிழைத்தவர்கள் மறுபடி பிழைக்கச் செய்யும் தருணமிது தப்பியவர்கள் இல்லம் வரும் மாலையிது. சுற்றி வந்து கைகொடுத்த கிராமத்து மனிதத்தை வாழ்த்தும் நிமிடமிது” எனக் கூறியுள்ளார்.