நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது – மம்தா !

1 Min Read
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது தான் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

ஒடிசா ரயில் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டியில்,”கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சிறந்த விரைவு ரயில்களில் ஒன்று.நான் 3 முறை ரயில்வே அமைச்சராக இருந்துள்ளேன், நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்!

இதுபோன்ற வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரித்து அறிக்கை தருகிறார்கள். எனக்குத் தெரிந்த வரை ரயிலில் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு கருவி எதுவும் இல்லை.

பாதுகாப்பு கருவி ரயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காத.  இறந்தவர்களை திரும்ப கொண்டு வர முடியாது, ஆனால் இப்போது எங்களின் மீட்பு பணி தொடரும்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review