தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மிக முக்கியமான அரசியலில் அதிமுக பிளவும் ஒன்று. இரண்டு குழுக்களாகி பின்னர் நான்கு குழுக்களாக பிரிந்து எம்ஜிஆரின், ஜெயலலிதாவின் படங்களை வைத்திருப்பவர் எல்லாம் ஒரு அதிமுக அணியாக செயல்பட்டு வரும் இந்த சூழலில் வலுவாக அதிமுகவை எதிர்த்தவர்களின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் ஒருவர் அவரது அணியினர் தொடர்ந்து பல சட்டப் போராட்டங்களை தற்போது வரை நடத்தி வருகின்றனர்.
ஓ பன்னீர்செல்வமாகட்டும், எடப்பாடி பழனிச்சாமியாகட்டும் பாஜகவை தன் வசப்படுத்துவதற்காக எல்லா வேலைகளையும் செய்து வருகின்றனர் இன்று வரை. அதில் பாஜக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள அதிமுகவிற்கு மறைமுகமாக ஆதரவளித்து வரும் இந்த சூழலில் தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தான் அதிமுக என அங்கீகரிப்பது போல ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்ற படிகளை ஏறி இன்னமும் நியாயம் கேட்டு வருகின்றனர். அங்கேயும் சாதகமான தீர்ப்பு வராத பட்சத்தில் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் என்ன செய்யலாம்? என பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தங்களுடைய பலத்தை நிரூபிக்க திருச்சியில் நடந்த மாநாடு.
எடப்பாடி பழனிச்சாமி அணியினரே திருச்சி மாநாட்டை கண்டு சற்று அதிர்ந்து தான் போனார்கள். பாஜக தன்னை கைவிட்டு விடும் என்ற பயத்தில் ஓபிஎஸ் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக அல்லாமல் தான் வலிமையாக இருக்க என்ன செய்யலாம் என்கிற முயற்சியிலும் ஓ பன்னீர்செல்வம் இருந்து வரும் இந்த சூழ்நிலையில். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருமகனும் அவரது நிழலுமாக கருதப்படுகிற சபரீசன் உடன் ஓ பன்னீர்செல்வம் நிகழ்த்திய சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து என்ன உரையாடினார்கள் என்று பல யூகங்களை கிளப்பி வருகிறது தமிழக அரசியலில்.
இந்த நிலையில் ஓபிஎஸ் சபரீசன் சந்திப்பு தொடர்பாக ”பூனைக்குட்டி வெளியே வந்தது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து தன்னை ஓரம் கட்டி விட்டார்கள் என்கிற மனநிலையில் என்ன செய்யலாம் அடுத்து என்கிற ஆலோசனையில் ஓபிஎஸ் இருந்து வருகிற சூழ்நிலையில், சபரீசன் சந்திப்பு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஓபிஎஸ் தன் ஆதரவாளரோடு திமுகவில் இணைய போகிறாரா? அல்லது அதிமுகவை கைப்பற்ற திமுகவின் உதவியை நாடுகிறாரா? என்கிற சந்தேகம் எல்லோரும் பத்திலும் இருந்து வருகிறது.

விரைவில் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். நேர் எதிரான கட்சியாக கருதப்பட்ட திமுகவோடு ஓபிஎஸ் நெருக்கமாக இருப்பது எதிரணியினருக்கு மட்டுமல்ல தன் ஆதரவாளர்கள் மத்தியிலும் அம்பலப்படுகிறார் ஓபிஎஸ் என்று கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.