TVM : சோகம் – செவிலியர் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை

1 Min Read
கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம்

குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை – தாய் மற்றும் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மற்றொரு குழந்தை உடல் தேடும் பணி தீவிரம்

- Advertisement -
Ad imageAd image

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தில் வசித்து வரும் சின்னராசு ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சோமசிபாடி கிராமத்தில் செவிலியராக பணியாற்றும் சூர்யா( 32) என்ற மனைவியும் லட்சன், 4 மற்றும் உதயன், 1 ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சூர்யா (32)

சின்னராசுக்கும் சூர்யாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு முன்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சின்னராசு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தார்.

நல்லிரவு வீடு திரும்பிய  சின்னராசு வீடுகள் திறந்து இருந்ததை கண்டு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்று அருகே சூர்யாவின் செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னராசு இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டை

விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக போராடி சூர்யாவையும் உதயனையும் சடலமாக மீட்டனர். மேலும், கிணற்றில் லட்சனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

செவிலியராக பணிபுரியும் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review