தண்ணீர் வராதா குழாய் மாநகராட்சியை கண்டித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்.

2 Min Read
போராட்டம்

பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது.அது ஒருபுறம் இருக்க.உள்ளாட்சி ஊழியர்கள் பழுதடைந்த குழாய்களை சரிசெய்யாமல் தண்ணீர் தட்டுப்பாடு செயற்கையாக மாறி இருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை அடுத்த சுந்தர்ராம் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது.கடந்த சில காலங்களாக குடிநீர் வருவதில்லை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சியில் பல முறை புகார் அளித்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை குடிநீர் தட்டுப்பாடு அந்த பகுதியில் தலைவிரித்தாடியது.மாநகராட்சி கண்டு கொள்ளவே இல்லை.இதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பல முறை ம்-ஆநகராட்சிக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து, குடிநீர் குழாயை எந்தவித அறிவிப்பும் இன்றி சிமெண்ட் வைத்து அடைத்து விட்டனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்தனர்.

நூதன போராட்டம்

இந்நிலையில் இன்று காலை சமூக இளைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடி ஆலோசித்தனர்.மாநகராட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர்.அதன் பிறகு அந்த மக்களுடன் சேர்ந்து தண்ணீர் வராமல் இருந்த அந்த குழாயை மாநகராட்சி நிரந்தரமாக மூடியதால். மூடப்பட்ட குடிநீர் குழாய் மீது வெள்ளை துணி போட்டு, மாலை அணிவித்து,நூதன முறையில் அதன் அருகாமையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம்

இது போன்று கடலூர் மாநகராட்சியில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.இதே நிலை மர்ர இடங்களில் ஏற்படுமானால் போராட்டத்தை தீவிர படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.தற்போது தான் கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டம் நடைமுறை படுத்தியதில் கடலூர் நகரம் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் இந்த மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது குடிநீர் பிரச்சனையும் சேர்ந்துள்ளது.

Share This Article
Leave a review