தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார். இது குறித்து பாலச்சந்திரன் கூறியவாறு;
“தென்கிழக்கு வங்க கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவு கூடும்.

இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடமேற்கு பந்தக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவக்கூடும் என்றும் மேலும் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதியில் பரவலாக மழையும் ஏழு இடங்களில் மிதமான மழையும் 31 இடங்களில் கனமழையும் பெய்தது அதிகபட்சமாக நாகை வேதாரண்யத்தில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது .
அடுத்து வரும் இரண்டு தினங்களில் தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்கள் ஓரு சில இடங்களில் மிதமான மழையும் 24 மணி நேரத்தில் நாகை மயிலாடுதுறை திருவாரூர் கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மன்னார் வளைகுடா, குமரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரையிலும் காற்று வீசக்கூடும் ஆகவே மீனவர்கள் இன்று முதல் 16ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். அக்டோபர் 1 முதல் தற்போது வரை 23cm மழை பெய்துள்ளது இது கடந்த காலத்தை காட்டிலும் நான்கு சதவீதம் குறைவு” என கூறினார்.