நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என நடிகர் விஜய் மாணவர்களை கேட்டுக்கொண்டது குறித்து பதிலளித்த அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளோம்,இனியும் சரியான தலைவரை தேர்ந்தெடுப்போம் என மாணவர்கள் கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை, புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் 4 கோடியே 52 இலட்ச ரூபாயில் புதிப்பிக்கப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார், இந்த ஆய்வின் போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் ,சட்டமன்ற உறுப்பினர் கணபதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி நிதி ஒதுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திட்டங்கள் இன்னும் முடிவடையாமல் இருப்பது ஏன் என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுத்திகாரிப்பு நிலையத்தை ஒழுங்குப்பட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும்,அந்த பணிகள் முடிவடையும் போது சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிவடைந்து விடும் எனவும் கூறியுள்ளார், அதே போல அயப்பாக்கத்தில் கழிவு நீர் காலவாய்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்ப்பட்டு மழைகாலங்களில் பிரச்சனை ஏற்ப்படுவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் முத்துசாயி உறுதியளித்துள்ளார், மேலும் தற்போது மதுவிலக்கு துறை அவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வைத்து விற்க்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் குற்றச்சாட்டுக்கள் வருவதும் அதனை ஆய்வு செய்து பார்க்கும் போது ஒன்றும் இல்லாமல் போவதும் பல விசயங்களில் நடந்திருப்பதாகவும் எனவே முழுமையாக ஆய்வு செய்த பின் இது குறித்து விரிவாக பேசுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.மேலும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என நடிகர் விஜய் மாணவர்களை கேட்டுக்கொண்டது குறித்து பதிலளித்த அமைச்சர் ஏற்கனவே நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளோம்,இனியும் சரியான தலைவரை தேர்ந்தெடுப்போம் என மாணவர்கள் கூறுவார்கள் என்றார்.