‘மகளை இழந்த காரணத்தால் கொண்டாட்டம் இல்லை’: இளையராஜா.

2 Min Read
மகளுடன் இளையராஜா

1975 ஆம் ஆண்டில், திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி என்ற தமிழ் மொழி திரைப்படத்திற்கான பாடல்களையும் திரைப்பட பின்னணி இசை இசையமைக்க இவரை நியமித்தார். ஒலிப்பதிவுக்காக, இளையராஜா நவீன பிரபலமான திரைப்பட இசை இசைக்குழுவின் நுட்பங்களை தமிழ் நாட்டுப்புற கவிதை மற்றும் நாட்டுப்புற பாடல் மெல்லிசைகளுக்குப் பயன்படுத்தினார், இது மேற்கத்திய மற்றும் தமிழ் மொழிகளின் இணைவை உருவாக்கியது. இளையராஜா தனது திரைப்பட பின்னணி இசையில் தமிழ் இசையைப் பயன்படுத்தியது இந்திய திரைப்பட பின்னணி இசை சூழலில் புதிய செல்வாக்கை செலுத்தியது.

- Advertisement -
Ad imageAd image

1980 களின் நடுப்பகுதியில், இளையராஜா தென்னிந்திய திரையுலகில் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இசை இயக்குனராக வளர்ந்து வருகிறார். இவர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ. என். வி. குறுப்பு, சிறீகுமாரன் தம்பி, வெட்டூரி சுந்தரராம மூர்த்தி, ஆச்சார்யா ஆட்டாரியா, சிறிவெண்ணிலா சீதாராம சாஸ்த்ரி, சி. உதய சங்கர் மற்றும் குல்சார் போன்ற இந்தியக் கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா (ஜுன் 2) தனது 81-வது பிறந்தநாளில் அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு வாழ்த்து தெரிவிக்க கோடம்பாக்கம் உள்ள அவரது ஸ்டூடியோவில் ரசிகர்கள் காலையிலேயே குவிந்தனர். இந்நிலையில், தனது பிறந்தநாளை ஒட்டி, இசைஞானி இளையராஜா கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று எனது பிறந்தநாள் என்பதால் நீங்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறீர்கள். ஆனால் அதே நேரத்தில் எனது மகளை இழந்த துக்கத்தில் நான் இருப்பதால், இன்று நான் பிறந்த நாளை கொண்டாடவில்லை’ என்று உருக்கமாக கூறினார்.

முன்னதாக, இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் நடிக்கும் தனுஷ் அது தொடர்பான போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலம் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார். இது இளையராஜாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பவதாரணி சிறந்த பின்னணி பாடகி ஆவார். அவரது தனித்துவமான குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.

Share This Article
Leave a review